குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்தது ஏன்? மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நோட்டீஸ்
தேர்தல் வழக்கை காரணம் காட்டி, தனது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) புதுப்பிக்க மறுத்ததை எதிர்த்து நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவுக்கு, சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










