ஜல்லிக்கட்டு: ஸ்டாலின் தொடுக்கும் கேள்விக் கணைகள்
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க. ஸ்டாலின் ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.


சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு மு.க. ஸ்டாலின் ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் திமுக மாவட்டச் செயலர்கள் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகர்களை சந்திக்கும் மோடி தமிழக எம்பிக்களை சந்திக்காதது ஏன்?
தமிழகத்துக்கு காவிரியில் உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அம்மாநிலம் அதனை நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசும் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதித்தால் தவறில்லை.
எத்தனையோ விஷயங்களுக்காக அவசரச் சட்டம் இயற்றியுள்ள மத்திய அரசு, ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் இயற்றாதது ஏன்? என்று மத்திய அரசுக்கு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் அரசுடன் திமுக கூட்டணி வைத்திருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக தவறான கருத்து நிலவுகிறது. ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகளை அதிமுக அரசு பின்பற்றாததாலேயே ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் உச்ச நீதிமன்றம் கைவிரித்துவிட்டது. எனவே, அவசரச் சட்டம் பிறப்பித்து மத்திய அரசு ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வகை செய்ய வேண்டும்.
இளைஞர்களின் வீரத்துக்கு உதாரணமாக விளங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...