வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

ஜல்லிக்கட்டு தடை எதிரொலி: பாலமேட்டில் காளைகளுடன் மக்கள் பேரணி! 

உச்சநீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததை கண்டிக்கும் விதமாக, ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:45 am

DIN

பாலமேடு: உச்சநீதிமன்ற தடை உத்தரவின் காரணமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததை கண்டிக்கும் விதமாக, ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் மதுரை மாவட்டம் பாலமேட்டில்  பெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.

பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்கின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தடை விதிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள்  நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் வைத்து வந்ததால் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து போட்டிகள்  நடைபெறும் என்ற எதிர்பபார்ப்பு நிலவியது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று கூறி மத்திய அரசு பின்வாங்கி விட்டது.

இந்நிலையில் மாட்டுப் பொங்கல் தினமான இன்று ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காளைகளுடன் பெரும் பேரணி நடத்தினர்.இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இங்குள்ள வீடுகள்  அனைத்திலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. மேலும் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் மற்றும் பீட்டா அமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். 

பேரணியில் அழைத்து வரப்பட்ட சில மாடுகள் கூட்டத்தைக் கண்டு மிரண்டு ஓடியதால் அங்கே பரபரப்பு நிலவியது. மாவட்ட எஸ்.பி பிடாரி தலைமையில் நூற்றுக்ணக்கான பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.