கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

மதுரையில் ஊர்வலம், ஆர்பாட்டங்களுக்கு 15 நாட்களுக்கு தடை : காவல்துறை ஆணையர் அறிவிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் சூடு பிடித்து வரும் வேளையில் மதுரையில் ஊர்வலம், ஆர்பாட்டங்கள்  நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

DIN

மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் சூடு பிடித்து வரும் வேளையில் மதுரையில் ஊர்வலம், ஆர்பாட்டங்கள்  நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் சூடு பிடித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருவதால் போராட்டம் தொடர்ந்து வலுவடைந்த படியிருக்கிறது.

மதுரை செல்லூர் ரயில்வே மேம்பாலத்தில் இன்று கூடிய மாணவர்கள் அங்கே சென்று கொண்டிருந்த ரயிலை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.  

இந்நிலையில் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் சிங் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றியம் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மதுரை மாநகரில் ஊர்வலம், ஆர்பாட்டங்கள்  நடத்த 15 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவு வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நீடிக்கும்.

எந்த விதமான கூட்டங்கள் நடத்துவதாக இருந்தாலும் ஐந்து நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டும்.   

இந்த உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.