மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

துரைமுருகன் வலியுறுத்தல்: காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் பேரவைக்கு வருகை

காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக காவல்துறை டிஜிபி பேரவையில் இருக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.

News image
Updated On :6 ஜூலை 2017, 7:37 am

DIN


சென்னை: காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழக காவல்துறை டிஜிபி பேரவையில் இருக்க வேண்டும் என்று துரைமுருகன் வலியுறுத்தியதைத் தொடர்ந்து டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேச எழுந்த துரைமுருகன், தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெறும் போது, காவல்துறை டிஜிபி,  காவல்துறை ஆணையர் இருக்க வேண்டும். அவர்கள் எங்கே? அவர்கள் வந்தால் தான் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசுவேன். அவைக்கு என்று ஒரு மரபு உண்டு என்று கூறினார்.

தலைமை மற்றும் உள்துறை செயலாளர்கள் இருக்கிறார்கள் பேசுங்கள் என்று கூறிய முதல்வர் பழனிசாமி, என்னுடைய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துரைமுருகன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மானியக் கோரிக்கை விவாதத்தை பிரச்னையுடன் துரைமுருகன் தொடங்குவது வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

மேலும், காவல்துறை அதிகாரிகளின் மனு அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க வகை செய்ய வேண்டும் என்றார் துரைமுருகன்.

தமிழகத்தில் கோவை சசிகுமார், சேலம் ரயிலில் கொள்ளை போன்ற பல முக்கிய வழக்குகள் விசாரிக்கப்படாமல் இருப்பது குறித்தும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, துரைமுருகன் குறிப்பிடும் வழக்குகள் புலன் விசாரணையில் இருப்பதாகக் கூறினார்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்திருப்பதாக துரைமுருகன் குற்றம்சாட்டியதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, கொலை, கொள்ளை நடப்பது என்பது அனைத்து மாநிலங்களிலும் இயல்புதான். தமிழகத்தில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கண்டுபிடித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குற்றங்கள் குறைவுதான் என்று பழனிசாமி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.