மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

விலையில்லா ஆடுகள் திட்டம் நிறுத்தி வைப்பு: தமிழக அரசு தகவல் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2017, 8:05 am

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டம் நடந்து வரும் வேளையில், கால்நடைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அப்பொழுது அந்த துறை சார்பாக அரசின் கொள்கை விளக்க குறிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

அந்த குறிப்பில்தான் தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாக 2016 டிசம்பரிலிருந்து 'விலையில்லா ஆடுகள்' திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதிய அளவு மழை பெய்தவுடன் இந்த திட்டம் மீண்டும் துவங்கப்படும் என்றும் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.