இதுகுறித்து, தமு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
’நீட்’ தேர்வுக்கு விலக்களிக்க வேண்டும், அதற்கு தமிழகத்தில் நடைபெறும் எடப்படாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம், திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் இந்த விவகாரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை இன்று மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை நடத்த சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இதில் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல், பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ - மாணவியர், அவர்களது பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.