திருவண்ணாமலையில் பத்திரிகையாளர்கள் தர்னா
திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குள் செல்ல விடாமல் அடக்குமுறையாக் கையாண்ட


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழக முதல்வர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குள் செல்ல விடாமல் அடக்குமுறையாக் கையாண்ட போலீஸாரைக் கண்டித்து, பத்திரிகையாளர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி சனிக்கிழமை (ஜூலை 29) பகல் திருவண்ணாமலைக்கு வந்தார். திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை விருந்தினர் மாளிகைக்குள் சென்ற அவரை புகைப்படம், வீடியோ எடுக்க பத்திரிகையாளர்கள் சென்றனர்.
ஆனால், பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போலீஸார் இந்த வழியாகச் செல்லக்கூடாது. பக்கத்தில் உள்ள வழியாகச் செல்லுங்கள் என்று பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கூறினர். இதையடுத்து, பக்கத்தில் உள்ள வழியாகச் செல்ல முயன்றபோது அங்கிருந்த போலீஸார் பத்திரிகையாளர்களை உள்ள செல்ல விடாமல் தடுத்து ஒருமையில் பேசி, அடிக்கப் பாய்ந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மூத்த பத்திரிகையாளர்கள் சின்னப்பா, விமல்ராஜ் ஆகியோர் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். உடன் இருந்த 30-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி., ஸ்ரீதர் வந்து பத்திரிகையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பத்திரிகையாளர்களிடம் காவல்துறையினர் ஒருமையில் பேசி, அடிக்கப்பாய்வது சரியா..? என்று கேள்வி எழுப்பினர். தர்னாவில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை ஐ.ஜி., ஸ்ரீதர் சமாதானம் செய்தார். இதையடுத்து, பத்திரிகையாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
ஆனால், பல இடங்களில் போலீஸார் அதிமுகவினரையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் ஒருமையில் பேசுவது, லத்தியால் வாகனங்களை அடித்து விரட்டுவது போன்ற அடக்குமுறைகளைக் கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...