அதேபோல, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் லஞ்ச பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்த ஆதாரங்கள் வருமான வரித்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி என்று நீண்டதொரு பட்டியலே வெளிவந்தது. அமைச்சர் காமராஜ் மீது ரூபாய் 30 லட்சம் பண மோசடி புகார் கொடுக்கப்பட்டு, உச்சநீதிமன்றமே மோசடி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இவர் மீது ஏற்கனவே பருப்பு கொள்முதல் டெண்டரில் ஊழல் புகார் கூறப்பட்டது. குழந்தைகள் நல அதிகாரியின் பணியை நிரந்தரம் செய்வதற்கு சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூபாய் 30 லட்சம் லஞ்சம் கேட்ட புகார் சந்தி சிரித்தது. சாலை போட்டதில் ஊழல் செய்திருக்கிறார் என்று கடலூர் மாவட்ட நீதிபதிகள் முன்பே தொழில்துறை சமீபத்தில் அமைச்சர் சம்பத் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.