/

குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழக டிஜிபி மீதான குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:33 pm

DIN


சென்னை: தமிழக டிஜிபி மீதான குட்கா லஞ்ச விவகாரத்தில் சிபிஐ விசாரணை அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டப் பொருட்களை விற்பனை செய்ய, தமிழக டிஜிபி மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி திமுக சார்பில் ஜெ. அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த கருத்தைத் தெரிவித்துள்ளது.

காவல்துறை உயர் அதிகாரி லஞ்சம் பெற்றத்தாக கூறப்படும் புகார் மிக முக்கியப் பிரச்னை என்பதால், இது குறித்து சிபிஐ விசாரிக்கலாம் என்றும், புகார்களை புறந்தள்ளிவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.