தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி.டி.வி.தினகரன் எப்படி கட்சி பணிகளை தொடருவார்? ஓ.பன்னீர்செல்வம் சாடல்!

டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது என்று நாங்கள் கூறும் பொழுது, அவர்  எப்படி கட்சி பணிகளை தொடர முடியும் ..

News image
Updated On :4 ஜூன் 2017, 8:26 am

DIN

பெரம்பலூர்: டி.டி.வி.தினகரன் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதே செல்லாது என்று நாங்கள் கூறும் பொழுது, அவர்  எப்படி கட்சி பணிகளை தொடர முடியும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக, முன்னாள் முதல்வரும், அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் வந்திருந்த அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதே அதிமுக விதிகளின்படி தவறு என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அப்படி இருக்கும் போது அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சி நிர்வாகியாக இருப்பார்?

அந்த நிலையில் அவர் எப்படி கட்சி பணிகளை தொடர முடியும்.  அவர் கட்சி பணிகளை தொடர முடியுமா என்பதைப் பற்றி அதிமுகவின் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் முயற்சியை சிலர் தங்களது தேவையில்லாத பேச்சின் காரணமாக கெடுத்து விட்டார்கள் என்று சென்னையில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.