முதல்வருடன் 8 மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக அம்மா அணியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.


முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக அம்மா அணியின் சட்டப் பேரவை உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.
பிற்பகல் 2.45 மணிக்குத் தொடங்கிய இந்தச் சந்திப்பு மாலை 6 மணி வரை நீடித்தது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்கும் எனவும், எங்களை யாரும் இயக்கவில்லை எனவும் மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை உறுப்பினர்களின் கோரிக்கைகள், பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் கேட்டறியத் தொடங்கினார். முதல் நாளில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துரையாடினார்.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் ராயபுரம் - அமைச்சர் டி.ஜெயக்குமார், பெரம்பூர் -வெற்றிவேல், மயிலாப்பூர் நடராஜ், விருகம்பாக்கம்-வி.என்.ரவி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் அமைச்சர் பெஞ்சமின், அம்பத்தூர்-அலெக்சாண்டர், பொன்னேரி-பலராமன், கும்மிடிப்பூண்டி-கே.எஸ்.விஜயகுமார், பூந்தமல்லி-ஏழுமலை, திருத்தணி-நரசிம்மன் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்-பழனி, திருப்போரூர்-கோதண்டபாணி, கடலூர் மாவட்டம் கடலூர்-அமைச்சர் எம்.சி.சம்பத், காட்டுமன்னார்கோயில்- முருகுமாறன், பண்ருட்டி-சத்யா, விருதாச்சலம்-வி.டி. கலைச்செல்வன் ஆகியோரையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம்-மைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை-குமரகுரு, வானூர்- சக்கரபாணி, கள்ளக்குறிச்சி-பிரபு, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி-அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், செய்யாறு தூசி-கே.மோகன், கலசப்பாக்கம்- பன்னீர்செல்வம் ஆகிய எம்.எல்.ஏ.க்கள் முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் அரியலூர்-அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், ஜெயங்கொண்டம்-ராமஜெயலிங்கம், பெரம்பலூர் மாவட்டம் குன்னம்-ஆர்.டி.ராமச்சந்திரன் (மாவட்ட செயலாளர்), பெரம்பலூர்-ரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முதல்வரைச் சந்தித்தனர்.
இதுகுறித்து கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் கூறுகையில், தொகுதி பிரச்னைகள், தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்தே முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டறிந்தார். அதில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை என்றனர்.
இன்றும் சந்திப்பு: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை விருதுநகர், மதுரை உட்பட 8-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. அம்மா அணி எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை (ஜூன் 7) சந்திக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...