அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் கோரி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் கோரி, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக அதிக அளவில் புகார்கள் எழுந்து வந்தது. இதன் காரணமாக சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டது.
இதனால் மாநில மனிதஉரிமை ஆணையமானது தானாக முன்வந்து நோட்டீஸ் ஒன்றை தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகிய இருவர்களுக்கும் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கு காரணம் என்ன என்றும், அதனை சரி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு வாரத்திற்குள் இந்த நோட்டீஸுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...