டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க வந்த 3 திமுக எம்எல்ஏக்கள்  கைது

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த 3 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:42 pm

DIN


புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த 3 திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் இன்று அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, மெய்யழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்க வந்த திமுக எம்எல்ஏக்களை தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்ததாக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆனால், மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டால் பிரச்னை ஏற்படும் என்று கூறி அவர்கள் கலந்து கொள்ள காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், இதனைக் கண்டித்து மூன்று எம்எல்ஏக்களும் பிருந்தாவன் சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் அதனாலேயே திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ரகுதி, மெய்யழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், நாங்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்றும் திமுக எம்எல்ஏக்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து எம்எல்ஏக்கள் கூறுகையில், விழாவில் பங்கேற்க வருமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், எங்களுக்கு விழா அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாலேயே நாங்கள் நிகழ்ச்சிக்கு வந்ததாகவும், இந்த விழாவில் நாங்கள் கலந்து கொண்டால் திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடும் என்று கருதியே ஆளும்கட்சியினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும் எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.