மணல் கொள்ளையை தடுக்கக்கோரி கெடிலம் ஆற்றில் இறங்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாநில செயலர் ரா.முத்தரசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


நெய்வேலி: மாநில செயலர் ரா.முத்தரசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் முத்தரசன் பேசுகையில், மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை, காவல்துறை ஆகியோரின் ஒத்துழைப்புடன் கடந்த பல ஆண்டுகளாகக் கெடிலம் ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்று வருகின்றது. இதைத் தடை செய்யக்கோரி கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தாவிட்டால் எனது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இந்த மணல் கொள்ளை முழுக்க முழுக்க மாவட்ட அமைச்சரின் ஒத்துழைப்புடன் நடைபெறுகிறது. கெடிலம் ஆற்றில் சுமார் 7 கி.மீ தூரத்திற்குப் பாதை அமைத்து நாளொன்றுக்கு 50-க்கும் மேற்பட்ட லாரியில் மணல் கொள்ளை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...