இணைப்பு சாத்தியமில்லை: பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு
இரு அணிகளின் இணைப்புக்காக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது.


இரு அணிகளின் இணைப்புக்காக அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது. இனிமேல் எடப்பாடி பழினிச்சாமி அணியுடன் இணைப்பும் கிடையாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை அருகே திருவேற்காடு வேலப்பன்சாவடியில் அ.தி.மு.க. புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் கடும் உழைப்பால் வளர்ந்த கட்சி அதிமுக, தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கியுள்ளது. அதை அவர்களிடம் மீட்க வேண்டும். அதற்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இதற்காகவே நீதிவிசாரணை நடத்த வேண்டும்.
தற்போது மாவட்டந்தோறும் நடத்தப்படும் கூட்டங்களில் அதிகளவில் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். இதைப் பார்த்தால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நம் அணியில்தான் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அதிமுகவில் இணைவது தொடர்பாக நம் அணியின் சார்பில் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டது. அது இன்றோடு கலைப்படுகிறது. இனிமேல் பேச்சுவார்த்தைக்கும் சாத்தியம் இல்லை. இது அனைவருடனும் கலந்து பேசி எடுத்த முடிவாகும் என்று அவர் கூறினார்.
அவைத் தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், க.பாண்டியராஜன், முன்னாள் பேரவைத் தலைவர் பி.எச்.பாண்டியன், மக்களவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...