டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

14 -இல் ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னையில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:44 pm

DIN

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், சென்னையில் புதன்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி:
குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதிமுக தொண்டர்கள் முழுமையாக எங்கள் பக்கம்தான் உள்ளனர்.
அணிகள் இணைப்பு தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அணி ஆக்கப்பூர்வ கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை. அதனால்தான் பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்பட்டது.
அதிமுக சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ள நிலையில், அவைத் தலைவர், பொருளாளர் தான் கட்சியை வழி நடத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் உள்ளது. அதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
எங்கள் அணியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெறும். அதில், சட்டப்பேரவையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விவாதிக்க உள்ளோம். அரசின் தவறுகளைப் பேரவையில் சுட்டிக்காட்டுவோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.