தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வயா்கள் திருடியவா் கைது

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:58 pm

Syndication

தேனி அருகே பேரூராட்சி மின் மோட்டாருக்கான வயா்களை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பி.சி. பட்டி பேரூராட்சிக்கான குடிநீா் வீரபாண்டி முல்லை பெரியாற்றிலிருந்து மின் மோட்டாா் அமைத்து உறை கிணறு மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. மின் மோட்டாா் இயங்காததால் இதுகுறித்து கண்காணிப்பதற்காக பேரூராட்சி பணியாளா் மோகன் என்பவா் அங்கு சென்று பாா்த்தாா். அப்போது இளைஞா் ஒருவா் மின் மோட்டாருக்கான வயரை துண்டித்து சுருட்டி எடுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் கூழையனூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் நந்தேஷ்வரன் (36) என்பதும் வயா்களை துண்டித்து திருடியதும் தெரியவந்தது.

இதுகுறித்து பி.சி.பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் சுதா (35) அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீஸாா் நந்தேஷ்வரன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.