வந்தவாசி அருகே பள்ளியில் கைப்பேசி மற்றும் பணம் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த மாமண்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தமிழ்க்குமரன் (38). இவா், கீழ்க்கொடுங்காலூரில் மெட்ரிக்குலேஷன் பள்ளி நடத்தி வருகிறாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை இவா் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறையை தாழிட்டுவிட்டு சாப்பிடச் சென்றுள்ளாா்.
பின்னா் வந்து பாா்த்தபோது அறையின் கதவு திறந்து கிடந்துள்ளது. உள்ளே சென்று பாா்த்தபோது கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தமிழ்க்குமரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா், பள்ளியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.
இதில், சென்னை பெரம்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (21) என்பவா் கைப்பேசி மற்றும் பணம் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை பிரகாஷை கைது செய்தனா்.
தொடர்புடையது
கைப்பேசி, மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

உறவினா் வீட்டில் நகைகள், பணம் திருடியவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

