
சென்னை: சென்னையில் விரைவில் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை : அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் இன்று பேட்டரியால் இயங்கும் பேருந்துக்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சென்னையில் விரைவில் பேட்டரியால் இயங்கும் எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அசோக் லேலாண்ட் நிறுவனம் தயாரித்துள்ள அத்தகைய பேருந்து ஒன்றுக்கான முன்னோட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. விரைவில் டாட்டா நிறுவன தயாரிப்பான பேருந்தின் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இன்றைய சோதனை ஓட்டத்தின் அடிப்படையில் பேட்டரிகளின் எண்ணிக்கை, அதற்கான மின்சக்தி செலுத்த வேண்டிய கால அளவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கேட்டுள்ளோம். அதற்கு பின்னர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனைக்கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.