ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எம்எல்ஏக்கள் விற்பனைக்கு: சபாநாயகர் தனபாலிடம் சிடியை அளித்தார் ஸ்டாலின்

தமிழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததாக எம்எல்ஏ சரவணன் கூறியதாக வெளியான விடியோ ஆதாரத்தை சபாநாயகர் தனபாலிடம் மு.க. ஸ்டாலின் அளித்தார்.

News image
Updated On :16 ஜூன் 2017, 8:45 am

DIN


சென்னை: தமிழக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததாக எம்எல்ஏ சரவணன் கூறியதாக வெளியான விடியோ ஆதாரத்தை சபாநாயகர் தனபாலிடம் மு.க. ஸ்டாலின் அளித்தார்.

தமிழக எம்எல்ஏக்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியான விடியோ குறித்து மேலும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

அந்த ஆதாரங்களை, சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு தனது அறைக்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு சபாநாயகர் தனபால் கூறினார்.

சபாநாயகர் சொன்னபடி, மு.க. ஸ்டாலின் இன்று மதியம், அவரது அறைக்குச் சென்று, விடியோ அடங்கிய சிடி ஆதாரங்களை தனபாலிடம் அளித்தார்.

முன்னதாக, விடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதால், சட்டபபேரவையில் இது குறித்து விவாதிக்க அனுமதிப்பீர்களா என்று ஸ்டாலின் கேட்டார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக்காததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.