அந்த குறிப்பிட்ட ஒரு பதிலில்தான், ஆர்.கே.நகர் தொகுதி இடைதேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்தவுடன் வருமான வரித்துறை அதிரடியாக பல இடங்களில் சோதனை செய்தது. அப்பொழுது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, செல்லூர் ராஜு, தங்கமணி மற்றும் விஜய பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கத் தொடர, தலைமைத் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கபப்பட்டுள்ளது. இந்த தகவலானது தற்பொழுது பெரும் பரப்பரப்பைக் கிளப்பியுள்ளது.