கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக அதிமுக அம்மா அணி முடிவு

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமை நிலையச் செயலாளருமான

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:48 pm

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வரும் அதிமுக அம்மா அணியின் தலைமை நிலையச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக அம்மா அணியின் சார்பில் சென்னையில் நடந்த இப்தார் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு அவர் சென்றார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் 50-க்கும் மேற்பட்டோர் தலைமை அலுவலகத்தில் கூடினர்.
ஆலோசனைக்குப் பின் முடிவு: அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், சில எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறியது:
பிரதமரின் வேண்டுகோள் அடிப்படையில்...பாரதிய ஜனதாவால் அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் தலைமைக் கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி ஒருமனதாக பிரதமரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை ஒருமனதாக ஆதரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
டிடிவி அணி புறக்கணிப்பு: டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இப்தார் விருந்திலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
கொறடா உத்தரவு இல்லை...குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கொறடா உத்தரவு எதையும் கட்சிகள் சார்பில் பிறப்பிக்க முடியாது. இதனால், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.