ராம்நாத் கோவிந்துக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டார் வெங்கைய நாயுடு
தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு, திமுக செயல் தலைவர்


புதுதில்லி: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. ஜூலை 17 ஆம் தேதி, குடுயரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதை அடுத்து தனது ஆளுநர் பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து அப்பதவியை கூடுதல் பொறுப்பாக மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கவனிக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார்.
இதனிடையே, பாஜக மூத்த தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக மீதமுள்ள நாள்களில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ராம் நாத் கோவிந்த் ஆதரவு திரட்டத் திட்டமிட்டுள்ளார். அவரது சார்பில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் மாநில வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இதுதொடர்பாகப் பேசிய வெங்கைய நாயுடு, வரும் 23 ஆம் தேதி ராம்நாத் கோவிந்த் வேட்பு மனு தாக்கல்செய்யும் நிகழ்ச்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...