மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி அதிர்ச்சி தருகிறது: வைகோ

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி

News image
Updated On :24 ஜூன் 2017, 7:06 am

DIN

சென்னை: மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில், தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தருகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய 83,359 மாணவர்களில் வெறும் 38.83 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சி தருகிறது.

நீட் தேர்வு தர வரிசையில் முதல் 25 பேரில் ஒரு மாணவர்கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு 'நீட்' தேர்வு நடத்தப்பட்டதால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருந்தது. கடந்த கல்வி ஆண்டில், பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 11 லட்சம் பேரில், 88 ஆயிரத்த்து 881 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அதில் தேர்வு எழுதிய 83,359 பேரில் வெறும் 32,368 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்தியப் பாடத்திட்டத்தின் கீழ் தொடர்பு இல்லாத கேள்வித்தாளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமல் திணறிவிட்டனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 1100 மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட நீட் தேர்வில் 110 மதிப்பெண்களைத் தொட முடியவில்லை. தமிழக மாணவர்களின் மருத்துக்கல்வி கனவுகளை நீட் தேர்வு முடிவுகள் தகர்த்துவிட்டன.

மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது.

தற்போது தமிழக அரசு, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையால் மேலும் சட்டச் சிக்கல் எழாமல், தமிழ்நாட்டில் கிராமப்புற ஏழை, பிற்படுத்தப்பட்ட, தலித் மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற தமிழக அரசு உடனடியாக முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.