டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஸ்டாலின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? கனல் கக்கிய செல்லூர் ராஜு!

ஸ்டாலின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? அவரது சொத்துக்கள் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

DIN

மதுரை: ஸ்டாலின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? அவரது சொத்துக்கள் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும் என்று தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

மத்திய அரசு ஹிந்தியை நம் மீது திணிக்கமுயற்சி செய்யக்க்கூடாது. அவ்வாறு செய்ய முயன்றதன் காரணமாகதான் காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியை இழந்தது. அதிமுக அரசு ஹிந்தி திணிப்பை அனுமதிக்காது.

தமிழக அரசு பற்றியும், அமைச்சர்கள்  பற்றியும் குறை கொண்டே இருக்கும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினின் தந்தை என்ன பெரிய தொழில் அதிபரா? அவருக்கு கார் உள்ளிட்ட சொத்துக்கள் எப்படி வந்தது என்று எங்களுக்கு தெரியும்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் ஆட்சிதான் நடக்கும்; மாநிலம் முழுவதும் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படும்.

நாங்கள் முன்பே கூறியது போல அதிமுக ஆட்சியானது யாருக்கும் அடிமையும் இல்லை; அரசனும் இல்லை.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.