ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மெரினாவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் கட்டப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு  

மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

News image
Updated On :28 ஜூன் 2017, 1:09 pm

DIN

சென்னை: மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு விபரம் வருமாறு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மெரினா கடற்கரையில் சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும்.

இதற்காக சர்வதேச அளவில் சிறந்த கட்டடக்கலை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும்.

அவர்கள் உருவாக்கித் தரும் வரைபடங்களிலிருந்து சிறந்த ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் அடிப்படையில்  கட்டுமானப் பணிகள் நடைபெறும்.

அத்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக சிறப்பு வளைவு ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.