பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூர் அருகே முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்

கடலூர் அருகே தொடர்ந்து இரு நாட்களாக முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2017, 5:37 am

சீனிவாசன்

நெய்வேலி: கடலூர் அருகே தொடர்ந்து இரு நாட்களாக முகமூடிக் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடலூர் அடுத்துள்ள மருதாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலக்கிருஷ்ணன் (55). விவசாயி. இவருடைய மனைவி தேவா (50).  செவ்வாய்க்கிழமை பாலக்கிருஷ்ணன் திருப்பதிக்குச் சென்றிருந்தார். வீட்டில் தேவா மட்டும் தனியாக இருந்தார். நள்ளிரவில் கடப்பாறையால் கதவை உடைத்து உள்ளேப் புகுந்த 2 கொள்ளையர்கள், தேவாவை எழுப்பி, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கத்தினால், கொலை செய்து விடுவதாக கொள்ளையர்கள் மிரட்டியதால் தேவா அமைதியாக இருந்துள்ளார்.

அவரது வீட்டில் இருந்து 50 சவரன் தங்க நகை, 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதேப் போல திங்கட்கிழமை இரவு சித்தரசூர் கிராமத்துக்குள் புகுந்த 6 முகமூடி கொள்ளையர்கள் அங்கிருந்த இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

நெல்லிக்குப்பம் காவல் சரகப் பகுதியில் 2வது நாளாகவும் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம் தொடர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.