விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு: கோட்டைக்காடு மக்கள் போராட்டம் வாபஸ்!

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு  மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

News image
Updated On :4 மார்ச் 2017, 11:05 am

புதுக்கோட்டை: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பக்கத்தில் உள்ள கிராமமான கோட்டைக்காடு  மக்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்துவதாக திட்டமிடப்பட்டிருந்த ஹைடிரோகார்பன் திட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக பக்கத்தில் உள்ள கிராமமக்களும் போராட்டம் செய்து வந்தனர். அவர்கள் அருகில் உள்ள கோட்டைக்காடு கிராம மும் இதில் அடக்கம்.

இந்நிலையில் கோட்டைக்காடு கிராம போராட்ட குழுத்    தலைவர் ஆரோக்கியத்துடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் நடத்திய பேச்சு வார்தையின் முடிவில், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஆரோக்கியம் அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.