போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறி: 3 இளைஞர்கள் கைது 

சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளன

News image
Updated On :20 மார்ச் 2017, 6:22 am

தினமணி

சென்னையில் பெண்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை அசோக்நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் பெண்களை குறிவைத்து தொடர் வழிப்பறி நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் இருசக்கர வாகனத்தில் வந்து இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து இளைஞர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து நெசப்பாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் 26, ஜாபர்கான்பேட்டைச் சேர்ந்த முனியப்பன் 18, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை காவல்துறையின் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூ.25,000 ரொக்கம் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.