நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை


சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையில் இன்று ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை.
மத்திய குற்றப்பிரிவில் உள்ள நிலுவை வழக்குகள் குறித்து அறிக்கை அளிப்பதில் கால தாமதம் செய்ததாலும், நேரில் ஆஜராகவும் தவறியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சென்னை மாநகர காவல் அணையர் ஜார்ஜூக்கு உத்தரவிட்டப்பட்டது.
இன்று காலை விசாரணை தொடங்கிய போது, காவல் ஆணையர் ஜார்ஜ் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவர் வரும் 27ம் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...