ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை
சென்னை மரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை


சென்னை மரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று காலை 9 மணியளவில் ஓபிஎஸ் அணியினர் மரியாதை செலுத்தினர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணியினர் சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இன்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதையடுத்து இன்று மதுசூதனன் வேட்புமனு தாக்கல் செய்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் அணியினர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று காலை 9 மணியளவில் வருகை தந்தனர்.
ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முன்னாள் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டவர்கள் வருகை தந்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...