மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுக அணிகளுக்கு புதிய பெயர், சின்னம்

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வி.கே.சசிகலா (விகேஎஸ்) தலைமையிலான அணிக்கு 'தொப்பி' சின்னத்தையும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

தினமணி

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த வி.கே.சசிகலா (விகேஎஸ்) தலைமையிலான அணிக்கு 'தொப்பி' சின்னத்தையும்,

Story image

தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணிக்கு 'இரட்டை மின் விளக்கு கம்பம்' சின்னத்தையும் பயன்படுத்த தலைமைத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
இதேபோல, சசிகலா அணியின் வேட்பாளர் 'அதிமுக அம்மா' என்றும், பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' என்றும் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்யவும் தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பூசலையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியும், வி.கே. சசிகலா அணியும் கட்சித் தலைமைக்கு அங்கீகாரம் கோரியும், கட்சிக்கு சொந்தமான இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியும் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட விசாரணையில், இரு தரப்பு அணிகளும் எதிர்வரும் ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தேர்தலின் போது 'அதிமுக' என்ற கட்சிப் பெயரையும், 'இரட்டை இலை' என்ற அக்கட்சியின் தேர்தல் சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
மேலும், இரு தரப்பும் வியாழக்கிழமை காலை 10 மணிக்குள்ளாக தங்கள் தாய் கட்சியின் பெயருடன் வேறு அடையாளத்தை குறிக்கும் வார்த்தைகளைச் சேர்த்து அக்கட்சியின் சார்பில் போட்டியிட அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆணையம் கூறியிருந்தது.
இதன்படி வியாழக்கிழமை காலையில் சசிகலா அணியைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையிலான குழுவினர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, 'அதிமுக - அம்மா அணி' என்ற அடையாளத்துடன், தேர்தல் சின்னமாக ஆட்டோ, தொப்பி, கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்றில் ஒரு சின்னத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி கடிதம் அளித்தனர்.
இதேபோல, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் வா. மைத்ரேயன் தலைமையிலான குழுவினர் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனுக்கு, 'அதிமுக - புரட்சித் தலைவி அம்மா' என்ற அடையாளத்துடன், தேர்தல் சின்னமாக இரட்டை மின் விளக்கு கம்பம், பானை, மோதிரம், படகோட்டி, சமையல் எரிவாயு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி கடிதம் அளித்தனர்.
இதைப் பரிசீலித்த தேர்தல் ஆணையம், டி.டி.வி. தினகரன் சார்ந்த 'அதிமுக - அம்மா' அணி தொப்பி சின்னத்தையும், மதுசூதனன் சார்ந்த 'அதிமுக - புரட்சித் தலைவி அம்மா' அணி, இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி அளித்தது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, 'எங்களுக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டுள்ளது தாற்காலிக ஏற்பாடுதான். புரட்சித் தலைவரால் (எம்ஜிஆர்) தொடங்கப்பட்டு ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் எங்களுடையது என மக்களுக்குத் தெரியும். அவர்கள் சரியான அணிக்கு தங்களது வாக்குரிமையை செலுத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பால் பாண்டியன் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு மக்கள் வாக்குரிமையை செலுத்தி உண்மையான அதிமுகவுக்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்வர் என்று நம்புகிறோம்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.