அதிமுக தலைமை அலுவலகத்தை முடக்க ஓபிஎஸ் அணி திட்டம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு
அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் அணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக என்ற கட்சியின் பெயரையும் தேர்தல் சின்னமான இரட்டை இலையையும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தாற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலா ஆகியோர் பயன்படுத்தக் கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று புதன்கிழமை இரவு உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரு அணிகளும், தங்களுக்கான கட்சியின் பெயரையும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 85 சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னத்தை தேர்வு செய்து இன்று வியாழக்கிழமைகாலை 10 மணிக்குள் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை சசிகலா தரப்பு பயன்படுத்த தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க ஓபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ராயப்போட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தை இதுவரை சசிகலா தரப்புதான் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, ஓபிஎஸ் அணி எதிர்ப்பால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக கட்சியின் சின்னம், பெயம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சசிகலா தரப்பினருக்கு ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...