இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு: தமிழிசை சவுந்தரராஜன்
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.


சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல. பாஜகவின் பின்னணியில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. ஓ.பி.எஸ். பின்னணியில் பாஜக தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. அதிமுகவுடனான நூறாண்டு பகையைத் தீர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்தவுடன் மத்திய அமைச்சக் வெங்கய்யநாயுடு ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார்.
அவருடைய துணையுடன் பாஜக தமிழகத்தில் நுழையப் பார்க்கிறது என்று அதிமுக எம்.பி. அன்வர் ராஜா பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன் அதை அதிமுக-அம்மா அணி தடுத்து நிறுத்தும் என்ரு கூறினார்.
இது தொடர்பாக சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களிடம் தமிழிசை கூறுகையில், ''எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டு ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பாதுகாக்க தகுதியுடையவர்கள் தற்போது அதிமுகவில் இல்லை. இதனால் சின்னம் முடக்கப்பட்டது சரியான முடிவு. தேர்தலுக்கு பின் அதிமுக முடங்கிபோகும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அடிப்படை அரசியல் தெரியாதவர்கள் சின்னம் முடக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறுகிறார்கள். இரட்டை இலை சின்னம் தோற்றுப்போக கூடாது என்பதற்காக தான் இயற்கையே இந்த சின்னத்தை முடக்கியுள்ளது என்று தமிழிசை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...