மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜர்

மத்தியக் குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

News image
Updated On :24 மார்ச் 2017, 10:25 am

தினமணி


சென்னை: மத்தியக் குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் உயர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.

கடந்த 2016 ஆகஸ்டில் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, மத்திய குற்றப்பிரிவில் 2011 வரை முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமலும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

நிலுவையில் உள்ள கொடுங்குற்ற வழக்குகளை 2 மாதங்களில் முடிக்கும்படி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பவும், அந்த வழக்குகளின் நிலை குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் காவல் துறையில் உள்ள கருப்பு ஆடுகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றியும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய அவகாசம் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால், காவல்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

அறிக்கை தாக்கல் செய்யாததால், காவல் ஆணையர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.