மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

புலிப்படை அமைப்பின் நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு: கருணாஸ் அறிவிப்பு!

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்படுவதாக கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான

News image
Updated On :29 ஜனவரி 2024, 11:18 am

தினமணி

சென்னை: முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்படுவதாக கட்சியின் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கருணாஸ் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளதாதக தகவல் வெளியாகியுள்ளது.

திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கருணாஸ்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக சசிகலா, பன்னீர்செல்வம் அணி என இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவரான நடிகர் கருணாஸ், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில், எனக்கு எம்.எல்.ஏ., என்ற அதிகாரத்தைக் கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் இல்லாத பேரவைக்கு வரவே எனக்கு ஆர்வம் இல்லை. எனக்கு இந்த அதிகாரமே வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.