ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அன்னியச் செலாவணி மோசடி வழக்கு: ஒத்திவைக்க கோரிய தினகரன் மனு தள்ளுபடி!

தன் மேலுள்ள இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்க கோரிய ...

News image
Updated On :27 மார்ச் 2017, 11:00 am

தினமணி

சென்னை: தன் மேலுள்ள இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஆர்.கே நகர் இடைத்தேர்தல் முடியும் வரை ஒத்தி வைக்க கோரிய டி.டி.வி தினகரனின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதிமுகவின் துணைபொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன். இவர் மீது  அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக  இரண்டு வழக்குகளை 1994-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்தது. 2015-ஆம் ஆண்டு அவரை இந்த வழக்குகளில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இதனை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மேல் முறையீட்டில் தீர்ப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணை தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் தினகரன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடியும் வரை வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி மலர்வதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அமலாக்கத்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தினகரனின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்தார்.

அவர் இந்த வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக நடந்து வருவதாகவும், தற்பொழுது தினசரி விசாரணை நடத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளதையும் சுட்டிக் காட்டினார். மேலும் இந்த வழக்கு விசாரணைக்கும், தேர்தலுக்கும் தொடர்பில்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மலர்வதி டி.டி.வி தினகரனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.