ஓபிஎஸ் அணி சின்னத்தை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் புகார்

பன்னீர்செல்வம் அணியினர் மின்கம்பம் சின்னத்தை பயன்படுத்தி, இரட்டை இலையை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருவதால், இந்தச் சின்னத்தை உடனடியாக மாற்றித்தர வேண்டும்
ஓபிஎஸ் அணி சின்னத்தை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் டிடிவி தினகரன் புகார்

பன்னீர்செல்வம் அணியினர் மின்கம்பம் சின்னத்தை பயன்படுத்தி, இரட்டை இலையை போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருவதால், இந்தச் சின்னத்தை உடனடியாக மாற்றித்தர வேண்டும் என்று ஆர்.கே. நகர் அதிமுக ( அம்மா) வேட்பாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி, அதிமுக (அம்மா) சார்பில், இந்தத் தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் பின்னர், கட்சியின் வேட்பாளரும், அதிமுக துணைப் பொதுச் செயலாளருமான தினகரன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கேள்வி: தோல்வி பயம் காரணமாகத்தான் மின்கம்பம் சின்னம் குறித்து நீங்கள் புகார் கூறியிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாரே?
பதில்: எங்களுக்கு தோல்வி பயம் இல்லை. மின்கம்பம் சின்னத்தை தவறாக பயன்படுத்தி, இரட்டை இலை போல மாயத்தோற்றத்தை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். எனவே தான் அந்த சின்னத்தை உடனடியாக மாற்றக் கோரி, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். ஒ.பன்னீர்செல்வத்திற்கு தான் தோல்விபயம். இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் கூட்டு முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இருவரும் கூட்டணி அமைத்து என் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள்,
கேள்வி: தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை அரசு தரப்பில் யாரும் சந்திக்கவில்லை என்று மு.க.ஸ்டாலின் புகார் எழுப்பியிருக்கிறாரே?
பதில்: போராட்டக் குழுவினரை சந்திக்கவில்லை என்பது தவறானது. தில்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள், தங்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்தது என்று பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு குற்றம்சாட்டுகிறார் என்று தினகரன் தெரிவித்தார்.
இதற்கிடையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறுக்கிட்டு, தில்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை சந்தித்துப் பேசியிருக்கிறார். மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லியுடனும், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமாபாரதியுடனும் சந்தித்து தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com