தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே திட்டப்பணிகள்: பெட்ரோலிய அமைச்சகம் 'திடீர்' அறிக்கை!

நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் துவங்கப்படும் என்று மத்திய  பெட்ரோலிய அமைச்சகம் ...

News image
Updated On :27 மார்ச் 2017, 12:05 pm

புதுதில்லி: நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் துவங்கப்படும் என்று மத்திய  பெட்ரோலிய அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில்  இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி நாடு முழுவது 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது.

அதன்படி இன்று புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மத்திய பெட்ரோலியத்துறை சார்பாக உயர் அதிகாரியான ராகேஷ் மிஸ்ரா இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கர்நாடகாவின் ஜெம் லாபாரட்டரீஸ் நிறுவனமும், காரைக்காலில் பாரத் ரிசோர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளன.

இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் முறையாக துவங்கப்படும்.அதற்கு ஏதுவாக மக்களின் அச்சம் தீர்க்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்காமல் தொடர்ந்து திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பொதுமக்களின் போராட்டங்கள் மீண்டும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.