தில்லி விவசாயிகள் போராட்டம்: தமிழக விவசாய அமைச்சர் நேரில் சந்திப்பு !
புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு ...


புதுதில்லி: புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் நேரில் சென்று சந்தித்தனர்.
வறட்சி நிவாரணம், விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அமைப்பானது தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
அவர்களை தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் இன்று நேரில் சென்று சந்தித்தனர். அவர்களது குறைகளை கேட்டறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, மத்திய விவசாயத்துறை அமைச்சரை தமிழக விவசாயிகள் நேரில் சென்று சந்தித்து குறைகளை எடுத்துக் கூற ஏற்பாடு செய்வதாக கூறியதாத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...