பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் இன்று வரிகள் மட்டும் பெறப்படும்
மத்திய அரசு தொடர்புடைய வருமான வரி, சேவை வரி, கலால் வரி உள்ளிட்டவற்றைச் செலுத்த வசதியாக பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் விடுமுறை தினமான புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும்


மத்திய அரசு தொடர்புடைய வருமான வரி, சேவை வரி, கலால் வரி உள்ளிட்டவற்றைச் செலுத்த வசதியாக பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் விடுமுறை தினமான புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை பாரத ஸ்டேட் வங்கி தலைமையக தலைமைப் பொது மேலாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
''இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி வருமான வரி உள்ளிட்டவற்றை பொது மக்கள் செலுத்த வசதியாக கடந்த சனிக்கிழமை (மார்ச் 25), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) ஆகிய இரண்டு விடுமுறை தினங்களில் தமிழகம்-புதுச்சேரியில் 150 பாரத ஸ்டேட் வங்கிகள் செயல்பட்டன; மொத்தம் 2,800 வரி பண பரிவர்த்தனைகள் நடைபெற்றன. இதே போன்று பொது மக்கள் வரி செலுத்த வசதியாக அங்கீகரிக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகள் புதன்கிழமை (மார்ச் 29) செயல்படும்''.
அதிகாரிகள் விளக்கம்: பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (மார்ச் 29) தெலுங்கு வருடப் பிறப்பு பொது விடுமுறை நாள் என்பதால் வழக்கமான பணப் பரிவர்த்தனைகள் நடைபெறாது.
எனினும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளிலும் வரி செலுத்தும் அரசு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...