காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று திமுக செயல் செலைவர்

News image
Updated On :29 மார்ச் 2017, 8:51 am

தினமணி

சென்னை: ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று திமுக செயல் செலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்ற இயற்கை எரிவாயுவை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று கூறி நெடுவாசல் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. கடும் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தங்கள்  கையெழுத்தாயின.

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசின் நடவடிக்கைகள் குறித்து பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு திமுக செயல் தலைவரும் தமிழக எதிர் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறுகையில், விவசாயிகள் பிரச்சனை குறித்து கிஞ்சித்தும் மாநில அரசு கவலைப்படவில்லை. இது கண்டனத்திற்குரியது. விவசாயிகளின் போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவது வேதனையாக உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் மாநில அரசு துணையுடன் மத்திய அரசு இரட்டைவேடம் போடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.