வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழகத்தின் மழை விருந்தில் சென்னையும் பங்கேற்கும்: ஏப்ரல் மாதம் ஏமாற்றாது!

கடந்த மார்ச் மாதம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நனைத்த மழை சென்னையை ஏமாற்றியது போல ஏப்ரல் மாதம் ஏமாற்ற வாய்ப்பில்லை என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:10 pm

தினமணி

சென்னை: கடந்த மார்ச் மாதம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை நனைத்த மழை சென்னையை ஏமாற்றியது போல ஏப்ரல் மாதம் ஏமாற்ற வாய்ப்பில்லை என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்.

ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் பாதியில் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இருப்பதாக பிரதீப் கூறியுள்ளார்.

வானிலை ஆய்வுகளை மேற்கொண்டு தனது பேஸ்புக்கில் மழை குறித்து தகவல்களை பதிவு செய்து வரும் பிரதீப் மேலும் கூறுகையில், மழை பற்றிய செய்தியில் கூடுதலாக ஒரு தகவல் உண்டு. அதாவது, இந்த மழை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் கிடைக்கும் என்பதால் இந்த விருந்தில் நிச்சயம் சென்னையும் பங்கேற்கும்.

இந்த மழை குறித்து தற்போது அறிவிப்பது மிக மிக முன்கூட்டிய கணிப்பு, இதுபோன்று முன்கூட்டியே தகவலை பதிவு செய்வது இல்லை. ஆனால், இந்த முறை சென்னைக்கு மழை என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதுபோன்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவை செய்துள்ளேன்.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் நீங்கலாக) மார்ச் மாதம் நல்ல மழை பெய்திருந்தாலும், இன்னமும் கூடுதலாக மழை தேவைப்படும் நிலையில் உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

எனவே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சென்னையிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெயில் கடுமையாக இருந்தாலும் கத்திரி வெயில் காலத்தில் மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை தணித்தது போலவே இந்த ஆண்டும் அமைய வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், ஏப்ரல் மாதம் ஏமாற்றாது என்றே நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.