கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நடமாடும் எம்எல்ஏ அலுவலகம்: ஓபிஎஸ் அணி தேர்தல் அறிக்கை வெளியீடு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் உட்பட 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் அணி வெளியிட்டுள்ளது.

News image

file photo

Updated On :30 மார்ச் 2017, 6:46 am

தினமணி


சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முன்னிட்டு நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் உட்பட 108 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஓபிஎஸ் அணி வெளியிட்டுள்ளது.

ஓபிஎஸ் அணி சார்பில் இன்று காலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியின் தேர்தல் வாக்குறுதிகளை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதியை தாங்கள் அறிவிப்போம் என்று முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நடமாடும் எம்எல்ஏ அலுவலகம் அமைக்கப்படும் என்று இன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, எழில் நகரில் சுற்றுலா மையம், நடமாடும் எம்எல்ஏ அலுவலகம், ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை, இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சி அளிக்கப்படும், மேலும் 2 உயர்நிலைப் பள்ளி, 1 மேல்நிலைப் பள்ளி அமைக்கப்படும், முதியோருக்கு ஓய்வூதியம் தடையின்றி வழங்கப்படும்என்பது உள்ளிட்ட 108 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தரமான  சாலை, பாதாள சாக்கடைதிட்டம்,  அனைவருக்கும் பட்டா, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஆர்.கே.நகர் தொகுதியில் அரசு கல்லூரி அமைக்கப்படும்,  தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.