விவசாயிகளை சந்திப்பதில் ராகுல் காந்தி மௌனம்? திருநாவுக்கரசர் குழப்பம்

தில்லியில் போராடும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை சந்திக்கவில்லை.
விவசாயிகளை சந்திப்பதில் ராகுல் காந்தி மௌனம்? திருநாவுக்கரசர் குழப்பம்

தில்லியில் போராடும் விவசாயிகளை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை சந்திக்கவில்லை. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், "ராகுல் காந்தியுடன் வியாழக்கிழமை சென்று விவசாயிகளை சந்திக்கவுள்ளேன்' என்றார். இதன்படி, தில்லிக்கு வந்த திருநாவுக்கரசர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை மாலையில் சந்தித்தார். ஆனால், ஜந்தர் மந்தருக்கு வருவது பற்றி ராகுல் தரப்பில் எவ்வித உறுதியும் அளிக்கப்படவில்லை. இதனால், திருநாவுக்கரசர் குழப்பம் அடைந்து காங்கிரஸ் தலைமையகத்துக்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் விடுக்கும் கோரிக்கை, தமிழகம் மட்டுமின்றி காங்கிரஸ் ஆளும் கர்நாடகத்துடன் தொடர்புடையது. இதனால், நேரில் வந்து தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தால் அது கர்நாடகத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ராகுலிடம் கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், விவசாயிகள் - ராகுல் சந்திப்புக்கு தில்லியில் முகாமிட்டு திருநாவுக்கரசர் முயற்சி செய்து வருவதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com