மதுரை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை பெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் என்று டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடக்கும் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரும், கர்நாடக மாநில அதிமுக பொறுப்பாளருமான புகழேந்தி வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை என்றுதான் புகார் தெரிவிக்கிறார்கள். கொஞ்சம் பொறுத்திருங்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சையின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். நாங்கள் அனுமதிக்காக காத்திருக்கிறோம். அது மட்டும் இல்ல, புகைப்படங்கள் வெளியாகும் பொழுது மொத்த உண்மையும் வெளிவரும். பலரது முகத்திரை கிழியும்.
இவ்வாறு புகழேந்தி தன்னுடைய பேட்டியின் பொழுது தெரிவித்தார்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


