சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் சட்டப்பேரவைக்குப் பொதுத் தேர்தல் வர வாய்ப்பு இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காகத்தான் இந்தச் செயல்வீரர்கள் கூட்டம் கூட்டப்பட்டது.
ஆனால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும்போது உள்ளாட்சித் தேர்தலுக்கும் முன்னதாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தர்ம யுத்தத்தைத் தொடங்கினோம். சசிகலாவையும், தினகரனையும் நீக்கிவிட்டதாக அதிமுக அம்மா அணியினர் கூறுவது பொய். இப்போதும் முக்கியப் பதவிகளில் சசிகலாவின் குடும்பத்தினரே உள்ளனர். சசிகலாவின் குடும்பத்தினரைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்கள் செய்த தவறுகளை மன்னிக்கும்.
ஆர்.கே.நகரில் எப்போது தேர்தல் நடைபெற்றாலும் மதுசூதனன்தான் வெற்றி பெறுவார். நாங்கள் தொடங்கியுள்ள தர்ம யுத்தத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...