புதுதில்லி: கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
1994-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமானது வெளியிட்ட அறிவிக்கை ஒன்றில் தமிழகம் முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பினை எதிர்த்து 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்பொழுது வழங்கப்பட்ட தீர்ப்பில் முதலில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தீர்ப்பு இருக்கலாம் என்று உத்தரவிடப்பட்டது. பின்னர் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வானது மேல்முறையீட்டில் தமிழ் அல்லது ஆங்கிலம் என்பதற்கு பதிலாக தமிழில்தான் தீர்ப்புகள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த பொழுது கீழ் நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கானது பின்னர் விரிவாக விசாரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
விஜய்தான் முதல்வர்; மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பதா? - ஜோதிமணி எம்.பி.

மே 9-ல் மேற்கு வங்கத்தில் பாஜக அரசு பதவியேற்பு! பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு!

3.2 ஓவரில் அரைசதம்: 300 ரன்கள் அடிக்குமா சன்ரைசர்ஸ்?

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
வீடியோக்கள்

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை


