வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை தனது ரசிகர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி. இப்படி ஒரு சந்திப்புக்காக சென்னைக்கு வந்து விட்டுத் திரும்பும் வழியில், மூன்று ரசிகர்கள் சாலை விபத்தில் இறந்து விட்டனர். இதன் பின்னர் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்தார். கடந்த 2008-ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரசிகர்களுடன் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை. பிறந்த நாள்களில் பெரும்பாலும் சென்னையில் இருப்பதையே தவிர்த்து வந்தார்.
சிங்கப்பூரில் இருந்து திரும்பிய பின்னர்.... உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர் தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் என வழக்கமாக போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது ரஜினிகாந்த் சந்தித்து வந்தார்.
இந்நிலையில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் தனது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார் ரஜினிகாந்த். இதையடுத்து ஏப்ரல் மாதத்திலேயே ரசிகர்களை சந்திக்கும் முடிவை எடுத்தார். ஆனால், இந்த முடிவிலிருந்து திடீரென பின் வாங்கினார். இதனால் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்தானது.
மே 15 முதல்... இந்நிலையில், ரசிகர்களை மே 15-ஆம் தேதி சந்திக்கவுள்ளார். முதல் கட்டமாக 5 நாள்கள் நடக்கும் இந்தச் சந்திப்பு 19-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கிறார். தேர்வு செய்யப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீனவர்களுக்காக விஜய் அளித்த வாக்குறுதிகள்!

அமர்நாத் யாத்திரை எப்போது?

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாதம் ரூ. 85,920 சம்பளத்தில் பஞ்சாப்-சிந்து வங்கியில் வேலை!

அதிரடியாக சதம் விளாசிய சஞ்சு சாம்சன்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


